Sign in or 

![]()
நல்வரவு
அன்புடன் நடராஜா முகுந்தன்
![]()
பொறியியல் பீடம்
மொரட்டுவைப் பல்கலைக்கழகம் - இலங்கை![]()
I' m publishing here that Tamil poem which written by me for our university Tamil literary Association's
annual magazine "SANKAMAM"........
தமிழே.......
என் உணர்வுக்குமுறல்களின் யதார்த்த வெளிப்பாடாய் ............
என் கனவுகள் கற்பனைகளின் வார்த்தை வடிவமாய்..........
காற்றோடு கலந்த சுவாசமாக என் உயிரோடு உறவாடும் தமிழே.......
உன்னை வர்ணிக்க உன்னிலிருந்து சொல் தேடும்
ஏழை தமிழனின் ஏக்கங்கள் இவை.............
கம்பன் கவிமழையில் நனைந்த காவியத்தமிழே ........
பாரதி பாடலில் பருவமடைந்த பைந்தமிழே .........
சிந்திப்போர் எண்ணங்களில் மிதக்கும் செந்தமிழே .....
மொழிகளிற்கு முகவரி கொடுத்த முத்தமிழே .......
புன்னகை பூத்து பொன் நகை கொடுத்து
எம் மன்னவர் வளர்த்த கன்னித்தமிழே .......
தமிழ் வல்லமை கூறும் என் பல்கலைக்கழக
சங்கமம் இதழில் இன்று தவழ்ந்து வரும் சங்கத்தமிழே .....
அந்நிய மொழி ஆதிக்கம் அழித்துவிடுமாம் உன்னை......!!!
உன் தொன்மையை அறியாக் கண்ணியமற்றவரின் கூற்றல்லவா இது....?
ஆண்டுகள் சில கடந்ததும் அணைந்துவிடுமாம் உன் மூச்சு......!!!
தணியாத தாகம் கொண்ட தார்மீகத் தமிழே உன்னை
தவறாகப் புரிந்தவனின் தறுதலைப் பேச்சல்லவா இது......?
மெல்லத் தமிழ் இனி சாகும் என்று சொல்லி எள்ளி நகைப்பவனுக்கு
கொள்ளி வைத்து .....,
இமயத்தில் மிளிர்கின்ற இன்பத்தமிழை
இணையத்தில் ஏற்றி இனிக்க வைப்போம் .........
நல்லூர் - யாழ்ப்பாணம்
கோணேஸ்வரம் - திருகோணமலை
திருப்பதி - இந்தியாClick here to go Next page
Page Designed by : Mugunth.N
Mugunth |
Latest page update: made by Mugunth
, Jan 3 2009, 2:39 AM EST
(about this update
About This Update
Edited by Mugunth
1 word deleted view changes - complete history) |
|
Keyword tags:
None
More Info: links to this page
|