உன் முகம் பார்த்ததால்......... ஒரு முழு நிலவு........ என் இதயத்தை....... முத்தமிடுகிறதம்மா........
உன் பாதச்சுவடுகளின்........ பதிவேட்டில் சொர்க்கதின் நிழற்படம் காண்கின்றேனம்மா.............
என் பிரிவினால் உன் விழிகள்...... எழுதிய கண்ணீரால்.... என் உடம்பில்..... ரத்த அணுகளின் பருவ வளர்ச்சி.... படிந்து போகுதம்மா........
உன் வார்த்தையில்......... வாடிவரும் தமிழில்.......... என் வாழ்கை........ பரிணாமிக்கின்றதம்மா........
Written By Urs - முகுந்தன்-
தமிழா..............
தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை தமிழை மறப்பதுவுன் நிலையோ? பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப் பேசிப் பழகிவிடு தமிழா! மெல்லத் தமிழ் இனி சாகும் என்று சொன்னவனுக்கு கொள்ளி வைப்போம. இன்பத்தமிழை இணையதினூடே இனிக்க வைப்போம்.
Written By Urs - முகுந்தன்-
கொலுசு.............
கழற்றி எறிந்துவிடடி உன் கால் கொலுசுகளை ............ உன் மனதின் மௌன மொழிகளை நானே புரிந்துவிட்டேன்.... உன் உடலுடன் ஒட்டி உறவாடியும் கூட உன்னைப் புரிந்துகொள்ளாமல் சத்தமிட்டு சிணுங்கும் அவைகள் உனக்கு தேவையா.......???